states

img

எனக்கும் சீட் வேண்டாம் பாஜகவில் இருந்து நடிகர் பவன் சிங் ஓட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான 195  பேர் கொண்ட முதற்கட்ட வேட்பா ளர் பட்டியலை சனியன்று வெளி யிட்டது பாஜக. இந்த பட்டியலில் மேற்கு  வங்க மாநிலத்தின் அசன்சோல் தொகுதி  வேட்பாளராக போஜ்புரி பாடகரும், நடி கருமான பவன் சிங் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், திங்களன்று திடீரென தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நடிகர் பவன் சிங், “சில காரணங்களால் அசன்  சோல் தொகுதியில் என்னால் போட்டியிட  முடியாது” என கூறி பாஜகவிற்கு அதிர்ச்சி  அளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பவன்  சிங் வெளிப்படையாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் பெண்கள்  தொடர்பாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கும்  நபரான நடிகர் பவன் சிங்கிற்கு பாஜக சீட்  வழங்கியுள்ளதற்கு மேற்கு வங்க மாநி லம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய தன் காரணமாகவே தேர்தலில் இருந்து  போட்டியிடாமல் நடிகர் பவன் சிங் ஓட்டம்  பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பவன் சிங் பெண்களை தவறாக  சித்தரிக்கும் வகையிலும், தனிப்பட்ட  முறையில் மேற்கு வங்க பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்திலும் தனது திரைப்பட பாடல்களை அமைத்து பல் வேறு கண்டனங்களுக்கு உள்ளானவர். தனது மனைவி மர்ம மரணம் தொடர்பாகவும் போலீசாரால் விசார ணைக்கு உட்படுத்தப்பட்டவர்.